BENEFITS  >> Statutory Benefits
நியதிச்சட்ட நன்மைகள்
 
நிதியத்தின் மீதியை வட்டி மற்றும் பங்கிலாபத்துடன் மீளப்பெறுதல்
 
நிதியத்தின் மீதியைக் கோருவதற்கு கட்டாய வயதொன்றினைப் பூர்த்தி  செய்வதற்கு ஊழியர் சேமலாப நிதியம் தேவைப்படுத்துகின்றபோதிலும், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது நிதியத்தின் மீதியைக் கோருவதற்கு குறிப்பிட்ட வயதுவரை காத்திருக்க வேண்டியதில்லை.
எனினும், பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்துதல் வேண்டும் :
நிதியத்தை மீளப்பெறுதல் கோரிக்கை செய்யப்பட வேண்டுமெனில் தொழில் முடிவுறுத்தல் கட்டாயமாகும்.
சேவை முடிவுறுத்தலுக்கான காரணம் ஓய்வுபெறுதல், பதவி விலகல், பதவி நீக்கம். பதவியை வெறிதாக்குதல் போன்றவையாக இருக்க முடியும்.

நிதி மீளச்செலுத்தப்பட்டுள்ள  போது தொழில் முடிவுறுத்தலின் திகதியிலிருந்து ஐந்து ஆண்டு முடிவுறும் வரை  நிதியத்தின் மீதியை மீளப்பெறுவதற்கான கோரலைச் செய்வதற்கு அங்கத்தவர் உரித்துடையவரல்ல.

இந்த ஒழுங்குகளுக்கு பின்வருவன விதிவிலக்கானவையாகும்:
 
60 வயதினை அடைதல்
நிரந்தரமாக வசிப்பதற்காக  வேறு நாடொன்றுக்கு குடிபெயர்தல்
ஓய்வூதியத்திய உரித்துள்ள அரச சேவையில் இணைதல்
நிரந்தர அங்கவீனம் காரணமாக தொழிலை முடிவுறுத்தல்
அங்கத்தவரொருவரின் இறப்பு
  மீளப் பெறல் கோரலைச் செய்வதற்குரிய பொதுவான அறிவுறுத்தல்கள்
 
மீளப்பெறல் கோரல்களைச் செய்வதற்குத் தகுதியுள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடங்களுக்கு கவனம் செலுத்துதல் வேண்டும் :
கோரல்களின் செயன்முறைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. ஆகவே,கோரல் விண்ணப்பப்படிவம் தரவுப் பிழைகளைத் தவிர்ப்பதற்காக நிதியை  மீளப்பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் தெளிவாகவும் பிழையின்றியும் நிரப்பப்டுதல் வேண்டும். பெயர், வங்கிக் கணக்கு விபரங்கள் போன்றவை தனித்த பெரிய எழுத்துக்களில் (BLOCK  CAPITAL  LETTERS)  இருத்தல்வேண்டும்.
அங்கத்தவர் பல தொழில் வழங்குநர்களிடம்  பணியாற்றியிருப்பின், ஒவ்வொரு தொழில்வழங்குருக்காகவும் வெவ்வேறான விண்ணப்ப படிவங்ளை சமர்ப்பித்தல் வேண்டும்.
அங்கத்தவர் தனது பெயரில் அல்லது இணைந்த வங்கிக் கணக்கொன்றினைக் கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும். வங்கியின் பெயர், கிளை, கணக்கு இலக்கம், கணக்கு வைத்திருப்பவரின் முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்ளைக் காட்டுகின்ற வங்கிப் புத்தகம் அல்லது விபரக்கூற்றின் நிழற் பிரதியொன்று கோரல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படுதல் வேண்டும்.
தொழில் வழங்குநரால் சான்றுப்படுத்திய தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
விண்ணப்பப்படிவத்தில் தரப்பட்ட அங்கத்தவரின் பெயர் திரட்டுக்களில், வருடாந்த அங்கத்தவர் விபரக்கூற்றில்,தேசிய அடையாள அட்டையில் அல்லது வங்கிக் கணக்கில் இருப்பதிலிருந்து வேறுபடுகின்ற சந்தர்ப்பத்தில் இந்தப் பெயர்கள் ஒரே நபரையே, குறிப்பிட்ட இந்த நபரையே குறிக்கின்றது என்பதை தொழில்வழங்குநரிமிருந்து சான்றுப்படுத்தி பெற்றுக்கொண்ட கடிதத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
அங்கத்தவர் பணியாற்றிய நிறுவனம் / கம்பனி தொழிற்படாத சந்தர்ப்பத்தில் மற்றும் உரிமையாளர், பங்குதாரர்கள் அல்லது பணிப்பாளர்ளைத் தெரியாத போது நட்டோத்தரவாதக் கடிதம் என்று தலைப்பிடப்பட்ட VI (D) படிவம் (மாதிரிப்படிவம் பின்னிணைப்பில் தரப்படுகின்றது) அங்கத்தவரினால் பூரணப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதுன், கிராமசேவகர் மற்றும் பிதேசச் செயலாளரினால் சான்றுப்படுத்தப்படுதல் வேண்டும். VI (C) படிவத்திற்கு மேலதிகமாக இந்த நட்டோத்திரவாதக் கடிதம் அதனகத்து தரப்பட்ட அறிவுறுத்தல்களின்படி கோரல் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவர்கள் ஐந்து வருட சேவையினைப் பூர்த்திசெய்திருக்கின்ற போதிலும் தற்போதைய தொழில் வழங்குநரிடமிருந்து பங்களிப்புத் தொகை செலுத்தப்படுகின்ற போதிலும் நிதியின் மீதியை மீளப்பெறுவதற்கான கோரலைச் செய்யமுடியாது.
 
    கோரல்கள் செலுத்தப்படுகின்ற படிமுறைகள்
 
சாதாரணமான முறைமை
  கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகள்  மற்றும் தேவைப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்ளைச் சமர்ப்பித்துள்ள போது அதற்கு உட்பட்ட வகையில்  கோரல் 21 வேலை நாட்களுக்குள் செலுத்தப்படுகின்றது.
விசேட முறைமை
  அவசர நிலைமை உதாரணமாக வேறு நாட்டுக்கு குடிபெயர்தல், நோய்வாய்ப்படல், சத்திர சிகிச்சை, நகை  அடகு மீட்டல், திருமணம், கல்விசார் செலவுகள் போன்ற அத்கைய குடும்பச் செலவினங்கள் போன்றவற்றிற்கு ஆவணரீதியான சான்றுகளை சமரப்பித்துள்ள  போது  14 வேலை நாட்களுக்குள் கோரல்கள் செலுத்தப்படுகின்றன.
விரைவான கோரல் முறைமை
  கோரல்கள், இரண்டு வேலை நாட்களுக்குள் செலுத்தப்படுதல் வேண்டும்.கோரல்ளை ஏற்பதற்கு முன்னர் பங்களிப்புத் தொகைகள் மற்றும் அறிக்கைகள் சபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.  கோரல்களின் பெறுமதியின் அடிப்படையில் ஒவ்வொரு கோரலுக்கும் அலுவலக சேவைக் கட்டணமொன்று அறவிடப்படும்.
 
கோரலின் பெறுமதி    
கட்டணம்
ரூபா. 200,000/-வரை ரூபா. 1,000/-
ரூபா.200,000/-இலிருந்துரூபா1,000,000/-வரை ரூபா. 2,000/-
ரூபா.1,000,000/-இற்கு மேல் ரூபா. 3,000/-
 
இந்த அடிப்படையில் நாளொன்றிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் கோரல்களின் எண்ணிக்கை 65 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
சபையின் பின்வரும் அலுவலகங்களில் மீளப்பெறல் கோரல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தலைமை அலுவலகம் ,தொழிற் செயலகம் ,நாரஹென்பிட்டி ,கொழும்பு 05
கம்பஹா, கண்டி, மாத்தறை, குருணாகல் மற்றும் பதுளை  பிராந்திய அலுவலகங்கள்.

மேலும், நிதிக் கோரல் விண்ணப்பங்ளை சபையின் ஏனைய பிராந்திய மற்றும் மாவட்ட அலுவலகங்களிலும் கையளிக்க முடியும்.

 
 
   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.