தொழில்தருநர்களின் விபரங்கள்
தொழில்தருநர்” என்பது வேலை வழங்குகின்ற எந்தவொரு நபரும், அல்லது பிற வேறு நபர்கள் சார்பாக எந்தவொரு வேலை யாளரையும் வேலைக்கமர்த்து கின்றவரும், தொழில்தருநர் அமைப்பொன்றினை உள்ளடக்குகின்றவரும் (அத்தகைய அமைப்பு தாபனம், கம்பனி, கூட்டுத்தாபனம் அல்லது தொழிற் சங்கமொன்று) மற்றும் பிற வேறு நபர்கள் சார்பாக எந்தவொரு வேலையாளரையும் வேலைக்கமர்த்துகின்றவரும், ஏதேனும் எழுதப்பட்ட சட்டம், சட்ட உரித்தாளர், சட்டப் பின்னுரிமையாளர், நிறைவேற்றுநர் அல்லது நிருவாகி மற்றும் கம்பனியொன்றினை ஒழித்துக்கட்டுநரின் கீழ் அரசாங்கத்தில் உரித்தளிக்கப்பட்டு மெற்கொள்ளப்படுகின்ற வர்த்தகமொன்றின் தகுதிவாய்ந்த அதிகாரியை உள்ளடக்குகின்றவர் அத்துடன் கூட்டிணைக்கப்படாத அமைப்பு என்கின்றவிடத்து தவிசாளர் அல்லது அத்தகைய அமைப்பின் செயலாளர் மற்றும் பங்குடமையொன்றாகவிருக்கின்றவிடத்து முகாமைத்துவ பங்காளி அல்லது முகாமையாளரைக் கருதுகின்றது.
 
“பணியாளர்” என்பது வேலைக்குள் நுழைந்துள்ள அல்லது தொழில்தருநருடனான ஒப்பந்தமொன்றின் கீழ் ஒப்பந்தம் தெரிவிக்கப்பட்டு அல்லது உட்கிடக்கை மூலமோ அல்லது வாய்மூலமோ அல்லது எழுத்து மூலமோ எந்தப் பதவியிலும் வேலையாற்றுகின்ற எந்தவொரு நபரும் மற்றும் அது சேவை ஒப்பந்தமாகவோ அல்லது பயிலுநர் ஒப்பந்தமாகவோ அல்லது தொழிலில் எந்த வேலையையும் நிறைவேற்றுவதற்கு தனிப்பட்ட ஒப்பந்தமாகவோ அத்துடன் அத்தகை ஏதேனும் ஒப்பந்தத்தின் கீழ் சாதாரணமாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள எந்தவொரு நபரையும், அத்தகைய நபர் ஏதேனும் குறித்த நேரத்தில் தொழிலிலிருக்கின்ற அல்லது தொழிலில் இல்லாமையை உள்ளடக்குகின்றது என்பதைக் கருதுகின்றது.
 
   உதவுதொகைக்கான தகைமை மற்றும் கொடுப்பனவு
தங்களது வர்த்தகத்தின் தன்மை மற்றும் வகைப்பாடு தொடர்பில் ஒரு பணியாளரைக் கொண்டுள்ள தொழில்தருநர் ஒருவர் அரசாங்க திணைக்களஙகளில் ஓய்தியத்தைக் கொண்டுள்ள பணியார்கள், பொது கூட்டுறவுகள், அதிகார சபைகள், சபைகள், உள்ளூராட்சி அதிகார சபைகள் போன்றை தனியார்  துறையிலுள்ள அமைப்புக்கள், நிறுவனங்கள் நிதியத்திற்கு உதவிதொகையைச் செலுத்துவதற்கு உரித்துடையவர்கள்.
 
   உதவுதொகைக் கொடுப்பனவிலிருந்து தவிர்க்கப்படுகின்ற அமைப்புக்கள், நிறுவனங்கள் மற்றும் நபர்கள்
எந்தவொரு வீட்டிலுமுள்ள வீட்டு வேலைக்காரர்கள்
அனாதைகள் போன்றேருக்கு பயிற்சி வழங்குகின்ற சமூக சேவைகள் நிறுவகங்கள்
பணியாளர்கள் 10 பேருக்குக்குறைந்த ஆதார அமைப்புக்கள். பணியாளர்கள் 10 பேருக்கு அதிகமெனில் அத்தகைய நிறுவனங்கள் கொடுப்பனவிற்கு உரித்தானவர்கள்.
குடும்ப விடயங்களை செய்கின்ற நிறுவனங்கள்
அனாதைகள், காது கேட்காதோர் போன்றோருக்கு தொழில் பயிற்சியை வழங்குகின்ற நிறுவனங்கள்
 
    ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை சட்டத்தினால் உள்ளடக்கப்பட்ட தொழில்தருர்கள்
அரச துறையிலுள்ள அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டத்திற்குஉரித்தற்ற பணியாளர் நிறுவனங்களின் தொழில்தருநர்கள்
பணிக்கமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தனியார் துறையிலுள்ள அனைத்து தொழில்தருர்கள்
தமது பணியாளர்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சேமலாப கணக்குகளைப் பேணுகின்ற அரச மற்றும் தனியார் துறையிலுள்ள அனைத்துத் தொழில்தருநர்கள்
 
    விதிவிலக்குகள்
அரசாங்க ஓய்வூதியத்திற்கு உரித்தற்ற பணியாளர்கள் தவிர்ந்த அரசாங்க மற்றும் உள்ளூராட்சிக்கு சட்டம் ஏற்பாடுடையதாகாது.
பணிப்பாளர்கள் பற்றும் பங்குதாரர்கள் மட்டுமே அங்கத்தவர்களாகவுள்ள தாபனங்கள்
 
  உதவுதொகைகளைக் கணித்தல்
ஒவ்வொரு தொழில்தருநரும் ஒவ்வொரு பணியாளருக்கும் உதவுதொகையைக் கொடுப்பனவு செய்வதற்கான பொறுப்பினைக் கொண்டிருக்கின்றனர்.தொழில்தருநர் எவரும்  பணியாளரொருவரின் வருமானங்கள்/வேதனங்களிலிருந்து கழித்தலாகாது.
 
    பணியாளரொருவருக்கான மொத்த வருமானங்கள்
   
  மொத்த வருமானங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குதல்  வேண்டும்.
வேதனம், சம்பளங்கள் அல்லது கட்டணங்கள
வாழ்க்கைச் செலவுப்பபடி, விசேட வாழ்க்கைப் படி மற்றும் ஏனைய ஒத்த படிகள்
தொழில்தருநரினால் பணியாளருக்கு விநியோகிக்கப்பட்ட சமைத்த அல்ல சமைக்காத உணவுகளின் பணப் பெறுமதி அத்தகைய பெறிமதிகளின் தொடபான தீமானங்கள் ாகட்டாயமாக தொழில் ஆணையாளரினால் எக்கப்படுதல் வேண்டும்
உணவுப் படி
  குறிப்பிடக் கூடியவறான எந்த வகையான ஊதியம்
கழிப்பனவுகள் (தரகு) துண்டு கூலி கொடுப்பனவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் வடிவிலான கொடுப்பனவுகள்
 
தொழில்தருநரின் உதவுதொகை   -  
மொத்த மாதாந்த வருமானத்திலிருந்து 3%(பணியாளரின் மாதாந்த வேதனங்கள்/ சம்பளங்களிலிருந்து கழித்தலாகாது)
 
 
   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.