EMPLOYERS  >>  Payment of Contribution
உதவுதொகைகளின் கொடுப்பனவு
 
       உதவுதொகைகளின் கொடுப்பனவு
   
     தொழில்தருநர்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்
பெரிய வகைப்பாடு
-
15 அல்லது அதற்கு அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள தொழில்தருநர்கள்
சிறிய வகைப்பாடு
-
15 இலும் குறைவான பணியாளர்களைக் கொட்டுள்ள தொழில்தருநர்கள் 
 
    பணத்தை அனுப்பும் முறை
 
கைமுறைப் பாங்கு
இலத்தினரியல் பாங்கு
 
மொத்தத் தொகை அனுப்பப்பட வேண்டிய முகவரி
நிதி முகாமையாளர் (உதவுதொகை/சேகரிப்பு)
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை
10 ஆவது தளம், தொழிற் செயலகம்
நாரஹென்பிட்டி
கொழும்பு
-05
 
  கைமுறையில் (பணம், காசுக்கட்டளைகள், காசோலைகள் என்பவற்றை கொடுப்பனவு செய்யும் முறை)
சகல கொடுப்பனவுகளும் பணம் அனுப்பும் (R1 அல்லது R4 படிவம்) படிவங்களில் இரு பிரதிகளில் சரியாக நிரப்பப்படல் வேண்டும். படிவத்தின் ஒரு பிரதி பணம் அனுப்பல் படிவம் கிடைத்ததை ஏற்றுக்கொண்ட அறிவித்தலுடன் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையினால் மீண்டும் தொழில் வழங்குநருக்கு அனுப்பிவைக்கப்படும்.
சகல கசோலைகளும் / வங்கிக் கட்டளைகளும் “ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை” எனும் பெயரில் வரையப்படல் வேண்டும். காசுக்கட்டளைகள் “ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை” எனும் பெயருக்கும் காசுக் கட்டளை மாற்றப்படும் தபால் நிலையம் “ பொது தபால் அலுவலகம்” என குறிப்பிடப்படல் வேண்டும்.
காசோலைகள் மற்றும் காசுக் கட்டளைகளை நாராஹேன்பிட்டயில் அமைந்துள்ள ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் பிரதான அலுவலகத்திலும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் கொழும்பு கோட்டை அலுவலகத்திலும் செலுத்த முடியும்.
அத்தோடு கம்பஹா, கண்டி, மாத்தறை, குருநாகல், காலி, இரத்திணபுரி, அனுராதபுரம், களுத்துறை, ஹட்டன், பதுளை, கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை போன்ற பிராந்திய அலுவலகங்களிலும் செலுத்த முடியும்.
காசாக செலுத்தப்படும் கொடுப்பனவுகள் டொரின்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளை, புறக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கி சூப்பர் கிரேட் கிளை மற்றும் நாராஹேன்பிட்ட மக்கள் வங்கிக் கிளை என்பவற்றில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
கசோலையில் அல்லது காசுக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை பணம் அனுப்பும் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையுடன் ஒத்திருத்தல் வேண்டும்.
நிலுவை கொடுப்பனவுகளை செலுத்தும் போது ஒவ்வொரு மாதத்திற்கும் அவற்றுக்கென தனியான பணம் அனுப்பும் படிவங்களை உபயோகிக்கவும். அவ்வாறில்லை எனின் மொத்த தொகையை பிரித்துக் காட்டும் தனியான அட்டவணையொன்றை இணைக்கவும்.
R1 பணம் அனுப்பும் படிவங்களை உபயோகிக்கும் தொழில் வழங்குநர்கள் எந்தவொரு மாதத்திலும் ஊழியர்களின் எண்ணிக்கை 15 ஐ விட குறையும் சந்தர்ப்பத்திலும் வழமையான ஒழுங்கு முறையைகட்டாயமாக பின்பற்றவும். சகல அரசாங்க மற்றும் பகுதியளவு அரசாங்க நிறுவனங்களும் கொடுப்பனவு செலுத்துவதற்கு கட்டாயமாக R1 பணம் அனுப்பும் படிவத்தினை பயன்படுத்தல் வேண்டும். தனிப்பட்ட அங்கத்துவ பங்களிப்பு தகவல்கள் படிவம் II இல் அரையாண்டுக்கு ஒரு முறை அனுப்பப்படல் வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து தொடர்புகொள்க முகாமையாளர் – அங்கத்தவர் கணக்குகள் ( பாரிய வகை) 011- 2369596 எனும் தொலைபேசி எண் ஊடாக தொடர்புகொள்க.
 

நிறுவனத்தின் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக தொழில் வழங்குனர்களில் எவராவது பணம் அனுப்பும் படிவம் R4 இலிருந்து RI க்கு மாறுவதற்கு விரும்பினால் பணம் அனுப்பும் படிவத்தில் மாற்றம் செய்வதற்கு முன்னர் தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்கு கட்டாயமாக அது தொடர்பாக ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபைக்கு அறிவித்தல் வேண்டும். (தொ.இ. 011- 2581704 – நீடிப்பு 623)
 
 
முக்கியமானது
தொழில் வழங்குநர்கள் தனது நிறுவனத்தில் 15 விட கூடிய எண்ணிக்கையான ஊழியர்கள் பணியாற்றினால் அவர்களது பங்களிப்புத் தொகைகளை R1 பணம் அனுப்பும் படிவத்திலும் ஊழியர்களது எண்ணிக்கை 15 விட குறைவாக உள்ள போது R4 படிவத்திலும்பங்களிப்புத் தொகைகளை அனுப்புதல் வேண்டும்.
   
 
மிக முக்கியமானது
மாதாந்த பங்களிப்புத் தொகைகள் அடுத்து வரும் மாதத்தின் இறுதி வேலை நாளன்று அல்லது அதற்கு முன்னர் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபைக்கு கிடைக்கக் கூடியவாறு அனுப்பிவைத்தல் வேண்டும்.
 
  மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க.

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை – 011- 2368160, 011- 2503911, 011- 2368508, 011- 2581704
 
         இலத்திரனியல் முறை ( இணையத்தளம் ஊடான கொடுப்பனவு)
 

சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு ஊ.ந.பொ.நி சபை தொடரறா (On line) கொடுப்பனவு திட்டமொன்றை அறிமுகம் செய்கின்றது. அது மிகவும் துரிதமானதும் மிகவும் வசதியானதுமான ஒரு கொடுப்பனவு முறையாகும்.

இணையத்தளம் ஊடாக தொழில் வழங்குநர்கள் தங்களது பங்களிப்பு தொகையை / மேலதிக கட்டணத்தை ஊ.ந.பொ.நி சபைக்கு செலுத்த முடியும். அத்தோடு பங்களிப்புத் தொகை பற்றிய தகவல்களை வங்கி விடுமுறை தினம் என்று பாறாமல் 24 மணி நேரமும் தமது அலுவலகத்திலிருந்தோ அல்லது எத்தகைய பின்தங்கிய ஒரு பிரதேசத்திலிருந்தோ பதிவேற்றம் செய்யலாம்.

தற்போது இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

..
ஏற்புடைய வங்கியின் பாவனையாளர் சேவை உத்தியோகத்தரை தொடர்புகொண்டு ஊ.ந.பொ.நி. சபையின் “e” வங்கி திட்டத்தில் பதிவு செய்துகொள்ளவும்.
   
 

இலங்கை வங்கி

 
..
திரு அநுர அஸ்மடல
 
பாவனையாளர் சேவை முகாமையாளர்
 
இலங்கை வங்கி – ஒன்றிணைக்கப்பட்ட கிளை
 
தொலைபேசி
011–2471613 / 011-2203104
..
திருமதி திலங்கா கமகே
 
பாவனையாளர் தொடர்பு அலுவலர்
 
இலங்கை வங்கி – ஒன்றிணைக்கப்பட்ட கிளை
 
தொலைபேசி
011-2203108 / 011-2399560
 

மக்கள் வங்கி

 
..
திரு டி.எஸ். துஷான் ஜயசேகர
 
பதவிநிலை உதவியாளர்
 
மக்கள் வங்கி – நாரஹேன்பிட்ட கிளை
 
தொலைபேசி – 011-2594503
..
திருமதி கே.எம். உபமாலி
 
பதவிநிலை உதவியாளர்
 
மக்கள் வங்கி – நாரஹேன்பிட்ட கிளை
 
தொலைபேசி – 011-2594503
 

கொமர்ஷல் வங்கி பீஎல்சி

 
..
திரு பிரியன் தோமஸ்
 
கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி
 
e – வங்கி நிலையம்
 
இலங்கை கொமர்ஷல் வங்கி பீஎல்சி பீஎல்சி
 
தொலைபேசி – 011-2353480
..
திரு மலித் குரே
 
கனிஷ்ட நிறைவேற்று உதவியாளர்
 
e – வங்கி நிலையம்
 
இலங்கை கொமர்ஷல் வங்கி
 
தொலை நகல் – 011-4718241
 

சம்பத் வங்கி

 
..
திருமதி விதுஷி விதான
 
கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி
 
வலையமைப்பு சேவை நிலையம் சம்பத் வங்கி
 
தொலைபேசி
011–4730593, 011-4730572
..
திரு அமித் ஹேவாவிதாரண
 
கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி
 
வலையமைப்பு சேவை நிலையம் சம்பத் வங்கி
 
தொலைபேசி
011–4730593, 011-4730572
 

ஹட்டன் நெஷனல் வங்கி பீஎல்சி

 
..
திரு ரொஹான் பெரேரா
 
பிரேன்ட் முகாமையாளர்
 
எச்என்பி பேபாஸ்ட் பிரிவி
 
ஹட்டன் நெஷனல் வங்கி பீஎல்சி
 
தொ. இல 011-2661976, 011-2661960
..
திரு கிஹான் விதானகே
 
வங்கி கூட்டிணைப்பாளர்
 
எச்என்பி பேபாஸ்ட் பிரிவு
 
ஹட்டன் நெஷனல் வங்கி பீஎல்சி
 
தொ. இல 011-2661976, 011-2661960
   
தரவேற்றுவதற்கு தேவையான காந்தஊடாககோவைப்படிவம்II / R4 (அங்கத்தவர் தகவல்கள்) இணையத்தளம் ஊடாக படிவம் II / R4 அங்கத்தவர் தகவல் தரவுகள் தரப்பட்டுள்ளன.
கொடுப்பனவுசெய்வதற்குமுன்னர் தயவு செய்து பதிவேற்றம் செய்யும் ஊழியரின் தகவல்களை ஊ.ந.பொ.நி. சபை முகாமையாளரிடமிருந்து (அங்கத்தவர் கணக்கு – பாரிய வகை) 011-2369596 தொலைபேசி எண் ஊடாக பெற்றுக்கொள்ளவும்.
மேலதிக கட்டண கொடுப்பனவுகளை செலுத்தும் போது மேலதிக கட்டண அறிவித்தல் இலக்கத்தையும் உள்ளடக்குவது கட்டாயமானதாகும்.
தயவுசெய்து ஏற்றுக்கொண்டமைக்கான ரசீதை கணனியிலிருந்து பெற்றுக்கொள்ளவும். இணையத்தளம் ஊடாக செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால்ரசீதுகள் விநியோகிக்கப்பட மாட்டாது.
 
     தண்டப்பணம் / அறவீடுகள்
 
காலதாமத கொடுப்பனவுகளுக்கு (கணிக்கப்பட்ட உதவுதொகையிலும் பார்க்க செலுத்திய தொகை குறைவானதாகவிருக்கும்போது முழுத் தொகைக்கு குறைவாக கொடுப்பனவு செய்யப்பட்ட நாட்களின் எண்ணிக்கைக்கமைவாக தண்டப்பணம் சேர்க்கப்படும்.
 
காலதாமத கொடுப்பனவுகளுக்காக
உதவுதொகை மீது கொடுப்பனவு செய்யக்கூடிய அறவீடுகள்
10 நாட்களை விஞ்சாத காலதாமதம்
05%
11 நாட்களுக்கும் 01 மாதத்திற்குமிடைப்பட்ட காலதாமதம்
15%
01 மாதங்களுக்கும் 03 மாதங்களுக்குமிடைப் பட்ட காலதாமதம்
20%
03 மாதங்களுக்கும் 06 மாதங்களுக்குமிடைப் பட்ட காலதாமதம்
30%
06 மாதங்களுக்கும் 12 மாதங்களுக்குமிடைப் பட்ட காலதாமதம்
40%
10 நாட்களை விஞ்சாத காலதாமதம்

50%

 
காலதாமத திரட்டுக்கள் (படிவம் II )
 
அனுப்பும் படிவம் R1 இன் கீழ் ஊ.ந.பொ.நிதியத்திற்குரிய  உதவுதொகைக்குப் பொறுப்புவாய்ந்த தொழில் தருநர்கள் பின்வரும் வகையில் ஒவ்வொரு மாதம் தொடர்பிலும் அவர்களின் பணியாளர்கள் சார்பில் செய்த உதவுதொகைகளின் விபரங்களுடன் கூட்டிணைந்த அரை ஆண்டு திரட்டினைச் சமர்ப்பிப்பதற்கு தேவைப்படுத்தப்படுகின்றனர்.
1 ஆவது அரை ஆண்டு (சனவரி முதல் யூன் வரை) அதே ஆண்டின் ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னர்.
2 ஆவது அரை ஆண்டு (யூலை முதல் திசெம்பர் வரை) தொடர்ந்து வருகின்ற  ஆண்டின் பெப்ரவரி  28 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னர்.
முறைப்படியான திகதிக்குப் பின்னரான மேற்படி திரட்டுக்களை சமர்ப்பிக்கின்ற தொழில்தருநர்கள், பூர்த்தியான ஒவ்வொரு மாதத்துடன் அல்லது முறையாக பூர்த்திசெய்யப்பட்டதும் சரியானதுமான திரட்டு சபையினால் பெறப்பட்ட திகதியின் காரணமாக  இறுதித்திகதி அல்லது அதற்கு முன்னர் திரட்டு இருந்ததிலிருந்த அதன் பகுதியுடன் தொடர்புபட்ட திரட்டுக்கான உதவுதொகையின் தொகையின் ஒரு வீதம் என்ற வீதத்தில் அறவீடொன்றைச் செலுத்துவதற்கு பொறுப்புவாய்ந்தவர்கள்.
 
   தொழில்தருநர்களை ஊ.ந.பொ.நிதியத்தில் பதிவுசெய்தல்
 
ஊ.சே.நி போன்று உதவுதொகைகளை செலுத்துவதற்கு முன்னர் ஊ.ந.பொ.நி பதிவு நடைமுறையொன்றினைக் கொண்டிருக்கவில்லை.
வர்த்தகமொன்றை ஆரம்பித்துள்ள தனது முதலாவது பணியாளரை ஆட்சேர்ப்புச் செய்துள்ள எந்தவொரு தொழில்தருநரின் முதலாவதும் முக்கியமானதுமான கடப்பாடு தொழில் ஆணையாளர் அதிபதியுடன் தனது வர்த்தகத்தைப் பதிவுசெய்தலும் தொழிலுக்கான பதிவு இலக்கத்தைப பெறுதலுமாகும்.
தொழில் திணைக்களத்திடமிருந்து பதிவு இலக்கத்தைப் பெற்றதன் பேரில் தொழில்தருநர் எழுத்து மூலம் அல்லது தனிப்பட்டரீதியில் ஊ.ந.பொ.நிதியத்திற்கு வருகைதந்து ஊ.ந.பொ.நிதியத்திற்கு கொடு்பனவு செலுத்துவதற்கு உரிய படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பெறுதல் வேண்டும்.
ஊ.ந.பொ.நி சபையில் ஒரு முறை முதலாவது உதவுதொகை பெறப்படுகின்றமை, தொழில்தருநர் ஊ.ந.பொ.நிதியத்தில் ”உதவு தொகை செலுத்துகின்ற தொழில்தருநர் பட்டியலில்” பதிவுசெய்யப்படுவார்.
அங்கீகரிக்கப்பட்ட சேமலாப நிதியத்திற்கு உதவுதொகை செலுத்துகின்ற தொழில்தருநர்களுக்கு ஊ.ந.பொ.நிதியத்திடமிருந்து பிறிதானதொரு இலக்கம் வழங்கப்படுகின்றது.அத்தகைய தொழில்தருநர்கள் மாதாந்தம் அனுப்பும் அனைத்து படிவத்திலும், அரையாண்டு திரட்டுக்களிலும் ஏனைய கடிதங்களிலும் அந்த இலக்கைத்தைக் குறிப்பிடுதல் வேண்டும்.
ஊ.ந.பொ.நி வேறான பதிவு முறைமையொன்றினைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே,ஊ.ந.பொ.நி அவர்களது கொடுப்பனவிற்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் தொழில்தருநர்களின் ஊ.சே.நி பதிவு இலக்கத்தையே பயன்படுத்துகின்றது.ஊ.சே.நி இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத புதிய தொழில்தருநர்கள், தொழில் திணைக்களத்திடமிருந்து ஊ.சே.நி பதிவு இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வரையில் அவர்களது கொடுப்பனவுகளுக்காக ஊ.ந.பொ.நிதியத்தின் உதவுதொகை / சேகரிப்புப் பிரிவிடமிருந்து தற்காலிக இலக்கத்தைப் பெற முடியும்.
 
    அங்கத்தவர்களுக்கு இலக்கங்களை ஒதுக்குதல்
 
பணியாளர்களுக்கு இலக்கங்களை குறித்தொதுக்குதல் தொழில்தருநர்களின் பொறுப்பாகும்
பணியாளருக்கு ஒரு முறை வழங்கப்பட்ட எண் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அந்தப் பணியாளர் அந்த நிறுவனத்தை விட்டு விலகிய போதிலும்கூட வழங்கப்படுதல் கூடாது.
பதவி விலகிய பணியாளரொருவர் ஊ.ந.பொ.நிதியினை மீளப்பெற்றதன் பின்னர் மீண்டும் இணைந்தால் அவருக்கு புதிய இலக்கம் வழங்கப்படுதல்  வேண்டும்.
 
    அங்கத்துவத்திற்கு  தகைமையுடையவர்கள்
 
வேலையின் தன்மை தொடர்பற்றது.தொழிலின் வகை முக்கியமற்றது.தொழில்தருநர் அவர்கள் நிரந்தரமோ, தற்காலிகமோ, பியிலுநரோ, அமைய அல்லது முறை மாற்று வேலையாளர் களோ உதவுதொகை செலுத்துதல் வேண்டும்.
துண்டு வீதம், ஒப்பந்த அடிப்படை, தரகுப்பண அடிப்படையில் வேலை செய்கின்ற பணியாளர்கள், எத்தன்மையிலும் அங்கத்துவத்திற்கு தகுதியுடைய எந்த விதத்திலும் ஆற்றப்பட்ட வேலை
 
    தவணை தவறிய தொழில்தருநர்கள் மீதான சட்ட நடவடிக்கை
வலியுறுத்தும் மற்றும் வழக்குத்தொடுக்கும் அலுவலர்கள், தவணை தவறுகின்ற மற்றும் உதவுதொகை செலுத்தாத தொழில்தருநர்கள் பற்றி பின்தொடர்கின்றனர். 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க  ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையினால் மற்றும் அதன் திருத்தங்களினால் குறித்துரைக்கப்பட்டவாறு நிதியத்திற்கு உதவு தொகை செலுத்துவதற்கு பொறுப்புவாய்ந்த ஒவ்வொரு தொழில்தநரும் நிதியத்திற்கு சரியான நேரத்திற்கு உதவுதொகைகளை வழங்குதல் வேண்டும். அன்றேல் வலியுறுத்தும் மற்றும் வழக்குத்தொடுக்கும் அலுவலர்கள், இந்த தவணை தவறுகின்ற மற்றும் உதவுதொகை செலுத்தாத தொழில்தருநர்கள் மேலதிக மிகை விதிப்புடன் கொடுப்பனவுகளைச் செய்வதற்குரிய அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவர்.
உதவுதொகையினைக் குறைவாக கொடுப்பனவு  செய்தல் அல்லது கொடுப்பனவினைச் செய்யாத சந்தர்ப்பத்தில் எந்தவொரு பணியாளரும்  சத்தியக்கடதாசியுடன் தவிசாளருக்கு, பொது முகாமையாளர் அல்லது பி.பொ.மு (E & RD),எந்தவொரு பிரதேச வர்த்தக முகாமையாளருக்கு எழுத்து மூலமான முறைப்பாட்டினைச் செய்யமுடியும்.பணியாளர்கள் கடிதங்கள், மின்னஞ்சல் அல்லது தனிப்பட்டரீதியில் ஊ.ந.பொ.நி அலுவலகங்களுக்கு தமது தொழில்தருநர்களுக்கு எதிராக முறைப்பாட்டினைச் செய்ய முடியும்.தொழில்தருநர், ஊ.ந.பொ.நி சபையினால் ஆக்கப்பட்ட கட்டளைகளுடன் பூரணமாக ,ணங்காதுவிட்டால்,பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உரிய தொழில்தருநரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப
்படும்.
 
 
   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.