<< முன்பக்கம்
 
   நலன்கள் – வழக்கமாக வினவப்படுகின்ற வினாக்கள்
(1) அங்கத்தவரொருவர் தொழிலிருந்து விலகாது ஐந்து வருடத்திற்கொருமுறை அவருக்கு வரவு வைக்கப்பட்டுள்ள தனது மீதியைக் கோர முடியுமா?
  இல்லை.தொழிலிலிருந்து நீங்குதல் மீது மட்டுமே உதவுதொகையினை மீளப்பெறுவதற்காக மீளப்பெறல் கோரலைச் செய்ய முடியும்.ஒரே குழுமத்திலிருக்கின்ற கம்பனிகளில் ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு மாறுதல் தொழிலிலிருந்து நீங்குவதாகக் கருதப்படமாட்டாது.
(2) “ஐந்து வருட ஒழுங்கு ” என்றால் என்ன?
  ஒரு முறை மீளப்பெறுகை பெறப்பட்டால், அங்கத்தவர் ஒருவர் தொழில் மாறியிருந்தாலும் பிறிதொரு மீளப்பெறுகையைப் பெறுவதற்கு இறுதியான மீளப்பெறுகை தொடர்பான தொழில் நீக்கத் திகதியிலிருந்து ஐந்து வருட காலத்திற்கு காத்திருக்க வேண்டும்.
(3) ஏதாவது தனிப்பட்ட காரணத்திற்காக நிதியத்திலிருந்து அங்கத்தவர் ஒருவர் கடனொன்றை அதாவது அங்கத்தவரின் கணக்கில் இருக்கின்ற மொத்த மீதிக்கு குறித்த வீதத்தில் கடனைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
 
இல்லை.அத்தகைய கடன்களுக்கு வசதிகள் உள்ளன. ‘வியன’ வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்புக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
(4) அங்கத்தவர்களுக்கு உள்ள நலத்திட்டங்கள் யாவை?
 

1.  மரண நலன் திட்டம் -  ரூ.100,000/=
2.  முழுமையான  அங்கவீனக் காப்புறுதித் திட்டம்  -  ரூ.200,000/=
3.  சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நிதியுதவித் திட்டம்  -  ரூ.300,000/=
4.  இருதய சத்திர சிகிச்சை நிதியுதவி  -  ரூ.300,000/=
5.  உள்பக்க கண் வில்லை பொருத்துதல் செலவு மீளளிப்பு  -  ரூ.30,000/=
6.  புலமைப் பரிசில் பரீட்சையில சித்தியடைந்த மாணவர்களுக்கான நிதியுதவி -  ரூ.15,000/=  வீதம் 9000 மாணவர்களுக்கு 
7.  “சிரமசுவ ரெகவரண” மருத்துவமனை அனுமதி செலவுகள் – ரூ. 25,000/=
8.  “வியன” வீடமைப்பு கடன் திட்டம் – ரூ.100,000/=  முதல் ரூ.2,500,000/=
9.  முழுமையாக அங்கவீனமுற்ற  ஊ.ந.பொ.நி. அங்கத்தவரகளின் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு தலா ரூ. 15,000 வீதம்  நிதியுதவி

10.  ஊ.ந.பொ.நி. சபையின்  அங்கத்தவர்களது க.பொ.த. (உ.தர) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கான நிதியுதவி  ரூ.12000/= வீதம் 5000 மாணவர்களுக்கு.
(5) ’வியன’ வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் அங்கத்தவரொருவர் எவ்வாறு வீடமைப்புக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்?
  கடன்கள், ஊ.ந.பொ.நி.சபையினால் இணங்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனை களுக்கமைவாக தேசிய அபிவிருத்தி வங்கியினால் (NDB) வழங்கப்படுகின்றன.இந்த நன்மைக்கான  அடிப்படை தேவைப்பாடுகள் ஊ.ந.பொ. நிதியத்தில் ஆகக்குறைந்து ஐந்து வருடங்களுக்கு தொடர்ந் தேர்ச்சியாக அங்கத்துவத்தைக் கொண்டிருத்தல் மற்றும் தேவையான மீதியை அங்கத்தவரின் கணக்கில் கொண்டிருத்தல் வேண்டும்.மேலதிக தகவல்களை தேசிய அபிவிருத்தி வங்கியில் பெற்றுக்கொள்ள முடியும்.
(6) நிதியத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நலன்புரி நன்மைகளிலிருந்து அங்கத்த வரின் குடும்பம் நன்மைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
  அங்கத்தவர் மட்டுமே ஊ.ந.பொ.நி நன்மைகளுக்கு தகுதியிடையவராவார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் நன்மைத் திட்டம் மற்றும் க.பொ.த.(உ.த) பரீடசையில் சித்தியடையும் அங்கத்தவரின் பிள்ளைகள் நன்மைகள் பெறுகின்ற திட்டமாகும்.
(7) நலத்திட்டங்களுக்கான வயதெல்லை யாது?
  அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஆகக்கூடிய வயதெல்லை 70 வயது ஆகும்.
(8) ஊ.ந.பொ.நி அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது நலத்திட்டங்கள் உள்ளனவா?
  ஆம்.பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் உயர் புள்ளிகளுடன் சித்தி பெறுகின்ற அங்கத்தவர்களின் பிள்ளைகள் 15,000/-. ரூபாவிற்கான நிதிப் பரிசுக்கு தகுதிபெறுகின்றனர்.பயனாளிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு 9000 ஆகும். அத்தோடு க.பொ.த (உ.தர) பரீட்சையில் சித்தியடையும்  அங்கத்தவர்களின் 5000 பிள்ளைகளுக்கு ரூ. 12,000 வீதம் உயர் கல்விக்கான நிதியுதவி வழங்கப்படுகின்றது.
(9) அங்கத்தவர் ஒருவர் இறக்கும் பட்சத்தில் நன்மைகளைப் பெறக்கூடிய பயனாளி / பயனாளிகளை அங்கத்தவர் ஒருவர் பெயர் குறிப்பீடு செய்ய முடியுமா?
  ஊ.ந.பொ.நி நன்மைகளுக்காகச் செய்யப்படுகின்ற பெயர் குறிப்பீடுகளின் அடிப்படையில் ஊ.ந.பொ.நி. சபை தனித்துவமாகச் செயற்படும். சுயவேலைவாய்ப்பிலீடுபட்டுள்ள அங்கத்தவர் திட்டம் தவிர, ஊ.ந.பொ.நி நிலுவைகள் தொடர்பில் அங்கத்தவரினால் செய்யப்படுகின்ற எந்தவொரு பெயர் குறிப்பீட்டினையும் சபை ஏற்காது.
(10) இறந்த அங்கத்தவர் ஒருவரின் நன்மைகள் தொடர்பான பிணக்கு தொடர்பில் சபையினால் எத்தன்மையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது?
  சபை அதனது சட்டப் பிரிவிடம் அதனது கருத்தினை நாடும். இறந்த அங்கத்தவரின் சட்டரீதியான உரிவினருக்காக  தீர்மானிக்கின்ற கொடுப்பனவுகளில் சபையின் தீர்மானமே முடிவானதாகும்.
(11) ‘சிரமசுவ ரெகவரண’ மருத்துவ திட்டத்தின்படி அங்கத்தரொருவர் தனது சேவைக் காலப்பகுதியில் 50,000/-  ரூபாவிற்கு மட்டுமே உரித்துடையவர். அங்கத்தவர் பிறிதொரு தொழில்வழங்குநரிடம் இணைந்துகொண்டால் பின்னர் பணிக்கமர்த்தப்பட்டிருக்கையில் பிறிதொரு 50,000/- ரூபாவினை அவர் கோர முடியுமா?
  இல்லை.அங்கத்தவரொருவர் தனது தொழில் வாழ்க்கைக் காலப்பகுதியில் 50,000/-  ரூபா வரை மட்டுமே பெறுவதற்கு உரித்துடையவர்.
 
 
   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.