MANAGEMENT  >>  Chairman
தவிசாளர்
 
திரு. மஹிந்த மடிஹஹேவா
தவிசாளர் / பி .நி.அ
ஊ.ந.பொ.நி.​ சபை
 
 
திரு. மஹிந்த மடிஹஹேவா அவர்கள் கொழும்பு இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பட்டதாரி ஆவார். பட்டத்தைப் பெற்ற பின்னர் தொழில் அலுவலராக 1967 ஆம் ஆண்டு தொழில் திணைக்களத்தில்  இணைந்த திரு. மஹிந்த மடிஹஹேவா அவர்கள் இலங்கை நிர்வாக சேவை 1 ஆம் வகுப்பு உத்தியோகத்தராக இருந்த நிலையில் தொழில் ஆணையாளர் பதவிக்கு உள்ளீர்க்கப்பட்டு பதவியுயர்வு பெற்றார். பின்னர் தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர் இறுதியில் தொழில் அமைச்சின் செயலாளராகவும்நியமிக்கப்பட்டார்.
2010 நவம்பர் 24 ஆம் திகதி வரை திரு. மஹிந்த மடிஹஹேவா அவர்கள் அப்பதவியை வகித்ததோடு, தனது பதவிக்காலத்தில்  தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய தேசிய நிறுவனம் (NIOSH)  மற்றும் தொழில் கற்கைகள் பற்றிய தேசிய நிறுவனம் (NILS) என்பவற்றை நிறுவுவதில் முன்னோடியாக செயற்பட்டார்.

அதன் பின்னர், 2010 டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி  முதல் செயல்படும் வண்ணம் சிரேஷ்ட அமைச்சர்கள் செயலகத்தின் செயலாளராகவும் பிரதான இணை நிறைவேற்று அதிகாரியாகவும் திரு. மஹிந்த மடிஹஹேவா அவர்கள் நியமிக்கப்பட்டார். அவர் 2015 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையில் அப்பதவியின் கடமைகளை நிறைவேற்றுவார். 2015 சனவரி மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் செயல்படும் வண்ணம்  இன்று வரை ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் தவிசாளராக திரு. மஹிந்த மடிஹஹேவா அவர்கள் செயற்பட்டு வருகின்றார். அவர் தேசிய தொழில் ஆலோசனைச் சபை, தொழிற் பயிற்சி அதிகார சபை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஷிரம வாசனா நிதியச் சபை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு ஆணைக்குழு, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், பெற்றோலிய  அகழ்வாராய்சி பற்றிய முகாமைத்துவக் குழு, கொழும்பு பல்கலைக்கச் சபை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பாடசாலை போன்ற பல்வேறுபட்ட நிறுவனங்களில் தவிசாளர்/ பணிப்பாளர்/ உறுப்பினர் பதவிகளை வகித்துள்ளார். ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் இலங்கையின் உள்நாட்டு பணிப்பாளராகவும் திறன் விருத்தி, தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் பற்றிய கூட்டமைப்பின் இணைத் தவிசாளராகவும்  கடமையாற்றியுள்ளார்.

திரு. மஹிந்த மடிஹஹேவா அவர்கள் தனது முதுமாணிப் பட்டத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)  டியூரின் நிலையத்திலும் ஜினீவா நகரில் அமைந்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ILO) தொழில் நிர்வாகம் பற்றிய தொழிற் பயிற்சி கற்கை நெறியொன்றினையும் தொடர்ந்துள்ளார். மேலும் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) மற்றும் ஜப்பான் உற்பத்தித்திறன்  நிலையத்தின் (JPC)  பல கருத்தரங்குகளில் உள்நாட்டு பணிப்பாளராக கலந்துகொண்டுள்ளார்.

1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 வரையிலான காலப்பகுதிக்குள்  இலங்கைக்கான  சர்வதேச தொழிலாளர் கவுன்சிலின் (ILC) பிரதிநிதியாக இருந்துள்ள அவர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 வரையிலான காலப்பகுதியில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
சிரேஷ்ட  அமைச்சர்களின் செயலகத்தின் செயலாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பின்னர் திரு. மஹிந்த மடிஹஹேவா அவர்கள் தேசிய மனிதவளம் மற்றும் தொழில் வாய்ப்புக் கொள்கையை தயாரிப்பதை ஆரம்பித்து அதற்கு வித்திட்டார். சிரேஷ்ட  அமைச்சர்கள் செயலகத்தின்  அமைச்சரவை துணைக்குழுக்கள் பலவற்றின் செயலாளராகவும் அவர் பணியாற்றுகின்றார்.

தனியார் துறைக்குரிய ஊழியர்களின் மற்றும் தொழிலை எதிர்பார்த்துள்ளவர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தேசிய தொழில் சேவையொன்றினை ஆரம்பித்து 1996 ஆம் ஆண்டு பயனுள்ள விதத்தில் மனிதவளத்தை நிறுவும் சேவை (HRPS)  தயாரிக்கப்பட்டது. மேலும் தொழில் வழிகாட்டல் மற்றும் சுய தொழில் வழிகாட்டல் நிலையமொன்று 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தொழில் நிர்வாகத்திற்குரிய சட்டங்களை அமுல்படுத்தும் மற்றும்  நடைமுறைப்படுத்தும் சகல பிரிவுகளும் வினைத்திறனுடன்  ஒன்றிணைக்கப்பட்டன.  அத்தோடு தொழில் திணைக்களத்தில்  சமூக கலந்துரையாடல் மற்றும் பணிகள் ஒத்துழைப்பு பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டது. மேலும் 2009 ஆம் ஆண்டு மனிதவலு மற்றும் தொழில் வாய்ப்பு திணைக்களமொன்றும் நிறுவப்பட்டது. மேற்சொன்ன அனைத்துப் பணிகளும் அவரது சிறந்த செயலாற்றுகையின் மறு வடிவங்களாகும்.
தேசியப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகிய முதலீட்டுச் சபையின் கருத்திட்டங்களுக்கும்  ஏனைய வியாபாரப் பணிகளுக்கும் ஏற்புடைய தேசிய மட்டத்திலான பிரதான தொழில் பிணக்குகள் தொடர்பாக சுமூகமான மற்றும் நிலைத்திருக்கும் தீர்வுகளை வழங்கும் சமாதான ஆலோசகராகவும் திரு. மஹிந்த மடிஹஹேவா அவர்கள் பயனுள்ள தலையீட்டாளராக சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார்.

 

 

   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.