MEMBERS  >>  Employed Members
பணிக்கமர்த்தப்பட்டுள்ள அங்கத்தவர்கள்
 
    ஊ.ந.பொ.நிதியத்திற்கு உதவுதொகைகளை அனுப்புதல்
 
தொழில்தருநர் 15 பணியாளர்களுக்கு குறைவாகக் கொண்டிருந்தால் உதவுதொகைகள் ஊ.ந.பொ. ‘ஆர்’ 4 படிவத்தில் நிரப்பப்படுதல் வேண்டும் என்பதுடன் அங்கத்தவர்களின் விபரங்கள் அதே படிவத்தில் நிரப்பப்படுதலும் வேண்டும்.
தொழில்தருநர் 15 பணியாளர்கள் அதற்கு அதிகமான பணியாளர்களைக் கொண்டிருந்தால் உதவுதொகைகள் ஊ.ந.பொ. ‘ஆர்’ 1 படிவத்தில் நிரப்பப்படுதல் வேண்டும் என்பதுடன் அங்கத்தவர்களின் விபரங்கள் படிவம் II திரட்டு என்றழைக்கப்படிகின்ற வேறான திரட்டில் ஒவ்கொரு ஆறு மாதமும் அனுப்புதல் வேண்டும்.அங்கத்தவரின் விபரங்கள் கோப்பிடப்படும்போது தே.அ.அட்டைக்கடைவாக சரியான பெயர், தே.அ.அ ,லக்கம் மற்றும் சரியான அங்கத்தவ இலக்கமும் உதவுதொகையும் கோ்பிடப்படுதல் வேண்டும்.
குறிபபு:
ஒரே அங்கத்தவ இலக்கங்கள் இரண்டு பணியாளர்களுக்கு வழங்கப்பட முடியாது என்பதை தயவுசெய்து குறித்துக்கொள்ளவும்.
 
   அங்கத்தவர்களின் பதிவு
 
பணியாளரொருவர் அவரது தொழிலின் முதல் நாளிலிருந்து ஊ.ந.பொ.நிதியத்தில் அங்கத்துவத்தை பெறுவதற்கு உரித்துடையவர். பணியாளர் சார்பில் ஊ.ந.பொ.நி அனுப்ப வேண்டியது தொழில் தருநரினது பொறுப்பாகும் என்பதுடன் அவ்வாறு செய்யத் தொழில்தருநரைத் தூண்டுவது பணியாளரின் பொறுப்பாகும்.
அங்கத்துவத்திற்கு தகுதியானவர்கள் யார்?
தொழிலின் தன்மையென்பது தொடர்பற்றது. அனைத்துப் பணியாளர்களும் அவர்கள் நிரந்தரமான, தற்காலிகமான, பயிலுநராக, அமைய மற்றும் மாற்றல்முறை  வேலையாளர் களாயினும் அவர்கள் அங்கத்துவத்திற்கு உரித்துடையவர்கள்.துண்டு வீதம், ஒப்பந்த அடிப்படை, வேலையின் செயற்பாட்டின்   அடிப்படை   அல்லது  பிற வேறு  முறையில் எவ்வாறிரிப்பினும் அங்கத்துவத்திற்கு உரித்துடையவர்கள்.
அங்கத்துவத்திற்காக நிரப்பப்பட வேண்டிய படிவங்கள்
ஊ.சே.நி விடயத்தில் இச்சந்தந்தர்ப்பங்களில் அங்கத்துவத்திற்காக படிவங்கள் நிரப்பவேண்டிய தில்ல
பணியாளர் ஒரு தடவை ஊ.சே.நிதியத்தில் பதிவுசெய்து உரிய பணியாளர் தொடர்பில் அத்தகைய ஊ.சே.நி. இலக்கத்திற்கு உதவுதொகைகள் அனுப்பப்பட முடியும்.தமது தனிப்பட்ட சேமலாப நிதியத்தைக் கொண்டிருக்கின்ற தொழில்தருநர் தனியார் சேமலாப நிதியத்தின் இலக்கங்களின் கீழ் உதவுதொகைகளை அனுப்ப முடியும்.
 
   கணக்கினை ஒன்றிணைத்தல்
 
ஊ.சே.நி. விடயத்தில் வெவ்வேறு தொழில்தருநர்களின் கீளுள்ள கணக்குகள் ஒன்றிணைக் கப்படமாட்டாது.
அங்கத்தவர்களின் பெயர்களைத் திருத்துதல்
திருத்தங்களின் தன்மைகளைப் பொறுத்து பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.
பழைய அல்லது பிழையான பெயர் மற்றும் புதிய அல்லது சரியான பெயரை அடையாள சான்றுப்படுத்தலுடன் தொழில்தருநரிடமிருந்து உறுதிப்படுத்திய கடிதமொன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
 
அனுப்பும் படிவம் ‘ஆர்’ I இனால் உதவுதொகைகள் செலுத்தபடுகின்றதென்றால், மற்றும் விபரங்கள் படிவம் II திரட்டுக்களில் முகாமையாளர் – அங்கத்தவர் கணக்குகளுக்கு (பெரிய வகைப்பாடு) அனுப்பப்படுகின்றதென்றால்
அனுப்பும் படிவங்கள் 4 இனால் உதவுதொகைகள் நிதி முகாமையாளர் – அங்கத்தவர் கணக்குகளுக ்குச் (சிறிய வகைப்பாடு) செலுத்தப்படுகின்றதென்றால்
முன்னைய அங்கத்தவர் தற்போது செற்பாட்டில் இல்லையென்றால் உங்களது பெயரை உறுதிப்படுத்தி பிரதேச செயலாளரினால் சான்றுப்படுத்தி உங்களது பிரதேச கிராம சேவகரிடமிருந்து கடிதமொன்று
முழுப் பெயரும் மாறுகின்ற சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் கடிதத்துடன் உதவு தொகைகள் பற்றிய அனைத்து விபரங்களும் அனுப்பப்படுதல் வேண்டும்.
முன்னைய தொழில்தருநர் தற்போது செயற்பாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், திருமணத்தின் காரணமான அல்லது பிறப்புச் சான்றிதழின் மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட மாற்றத்திற்கு தொழில்தரிநரினால் சான்றுப்படுத்திய பிறப்பு/திருமண சான்றிதழ்கள் அனைத்தினதும் பிரதிகள் மற்றும் சட்ட ஆவணங்களை அனுப்புதல் வேண்டும்
அங்கத்தவரின் தே.அ.அ இலக்கத்தைத் திருத்துதல்
பெயர், பழைய தே.அ.அ இலக்கம், புதிய தே.அ.அ இலக்கம் மற்றும் மாற்றத்திற்கான காரணம் என்பவற்றை உறுதிப்படுத்தி தொழில்தருநரிடமிருந்து கடிதமொன்று அனுப்பப்படுதல் வேண்டும்.இதற்கு மேலதிகமாக, தேவையானவிடத்து கிராம சேவகரிடமிருந்து எழுத்து மூலமான உறுதிப்படுத்தல் அல்லது ஆட்பதிவு அவசியமானதாகும்.தே.அ.அ. இலக்கத்தை மாற்றுதல் சிக்கலாகையால் சரியான ஆவணப்படுத்தல் வேண்டுகோளுடன் அனுப்பப்படுதல் வேண்டும்.
தே.அ.அ இலக்கத்தை ஏன் மாற்றுதல்?
நன்மைகளுக்காக எப்பொழுது விண்ணப்பிப்பது
வீடமைப்புக் கடன்களுக்காக எப்பொழுது விண்ணப்பிப்பது
கணக்கு மீதிகளை எப்பொழுது வழங்குதல்
ஊ.ந.பொ.நி. உள்ள தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் அங்கத்தவரினால் சமர்ப்பிக் கப்பட்டுள்ள தே.அ.அ. இலக்கம் என்பன ஒத்ததாக இருத்தல் வேண்டும்
 
 
 
   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.