ஊ.ந.பொ.நி சபை பற்றி
ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியச்சபை 1980 ஆம்அண்டு 46 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி தனது செயற்பாடுகளை ஆரம்பித்து தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வந்தது.  தற்போது,தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்  கௌரவ ரவீந்திர சமரவீர அவர்களின் கீழ் இயங்கிவருகின்றது. அரசாங்க ஓய்வூதியத்திட்டத்திற்கு உரித்தற்ற அனைத்து அரச துறைப் பணியாளர்களும், அனைத்து தனியார் துறை பணியாளர்களும் இந்த நிதியத்தின் அங்கத்தவர்களாவர். அவர்களது தொழில்வழங்குநர்கள் தமது பணியாளர்களின் நிகர உழைப்பின் 3% இனை மாதாந்தம ஆனுப்புதல் வேண்டும்.  ஆகவே பணியாளர்கள் / அங்கத்தவர்கள் சார்பாக தொழில் தருநர்கள் மட்டுமே உதவுதொகை செலுத்துவது என இது ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து வேறுபடுகின்றது. ஆகவே, இது அங்கத்தவர்கள் பங்களிப்புத் தொகை செலுத்த தேவையற்ற ஒரு நலத்திட்டமாகும். கடந்த 37 ஆண்டு காலப்பகுதியில் நிதியமானது விரைவாக வளர்ச்சியடைந்துள்ளதுடன், 2017 ஆம் ஆண்டின் இறுதியில் அது 274 பில்லியன் ரூபாவாக இருந்தது. இந்த நிதியத்தின் மூலம் செயலூக்கமுள்ள 2.6 மில்லியன் மக்களுக்கு சேவை வழங்கப்படுகின்றது. அந்த அங்கத்தவர்களுக்காக 79000 தொழில் வழங்குநர்கள் பங்களிப்புத்தொகை செலுத்துகின்றனர்.
 
சபையின் பிரதான செயற்பாடுகள்
தொழில்வழங்குநர்களிடமிருந்து  பங்களிப்புத்தொகையினைச் சேகரித்தல்.
அத்தகைய நிதிகளை கவனமாக முதலீடு செய்தல்.
அங்கத்தவர்களுக்கு சமூக, நலனோம்பல் நன்மைகளை வழங்குதலும், கோரல்களைச் செலுத்துதலும்.
கொடுப்பனவு செய்யாத தொழில்வழங்குநர்களைப் பின்தொடர்தல் மற்றும் மிகை விதிப்பு வருமானங்களை சேகரித்தல் உள்ளடங்கலான செயற்பாடுகளும் சட்ட நடவடிக்கைகளும்.
அங்கத்தவர்களின் கணக்குகளை பராமரித்தலும், வருடாந்த அங்கத்தவரின் விபரக் கூற்றுக்களை வழங்குதலும்.
நிதியத்தினால் உழைக்கப்பெற்ற இலாபத்தின் அடிப்படையில் அங்கத்தவர்களுக்கு வருடாந்தம் பங்கிலாபத்தை வெளியிடல்.
சுயதொழிலாளர்களை நிதியத்தின் அங்கத்தவர்களாகச் சேர்த்துக்கொள்ளுதல்.
 
  அங்கத்தவர்கள் நன்மைகள்
நிதியத்தைத் தாபித்ததன் பிரதான குறிக்கோள் யாதெனில், அதன் அங்கத்தவர்களுக்கு பங்களிப்புத்தொகை அறவிடாது நலன்களை வழங்குவதாகும். அதற்காக தற்போது பின்வரும் 08 திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த நன்மைகள் அங்கத்தவர்களின் கணக்கிலுள்ள நிலைவை தொடர்பில் கருத்திற்கொள்ளாது வழங்கப்படுவதுடன், அவ்வாறு வழங்கப்பட்ட நலன்கள் தொடர்பில் அவர்களது மீதிகளில் எவ்வித கழிப்பனவும் செய்யப்படுவதில்லை.  ஒவ்வொரு ஆண்டும் நிதியத்தினால் வெளிப்படுத்தப்படும் முழு வட்டி மற்றும் பங்கிலாபத்துடன் அங்கத்தவர்களின் கணக்கில் வரவில் வைக்கப்படுகின்றது.
நலத்திட்டம்
பெறுமதி
இறப்பு நன்மைகள்
ரூபா 100,000/-
நிரந்தரமான அங்கவீனம்
ரூபா. 200,000/-
கண் வில்லை பொருத்துதல்
ரூபா. 15,000 ஒவ்வொரு கண்ணிற்கும்
இருதய அறுவைச் சிகிச்சை உதவி
ரூபா. 300,000/-
சிறுநீரகத்தை மாற்றுவதற்கான உதவி
ரூபா. 300,000/-
மருத்துவமனையில் அனுமதி திட்டம்
ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூபா. 25,000/- (வாழ்நாள் முழுவதற்கும் ரூபா. 50,000/-).
ஆண்டு -05 புலமைப்பரிசில்
ஆண்டொன்றிற்குரூபா.15,000/- வீதம் 9,000 புலமைப்பரிசில்கள்
கபொ.த (உ.த) பரீட்சை
5000 பேருக்கு ஒவ்வொருவருக்கும் 12,000/- ரூபா, ஆண்டொன்றிற்கான நிதி நன்கொடை
"வியன" வீடமைப்புக் கடன் திட்டம்
இலகு வட்டி வீதத்தில்   ரூபா. 2,500,000 வரை
 
  பிரதான தொழிற்பாடுகள்
செயற்பாடுகள்
2016
2015
2014
தெழில்வழங்குநர்களிடமிருந்தான பங்களிப்புத்தொகைகள் (ரூபா. மில்.)
20,318.0
18,087.0
15,582.0
முதலீட்டு வருமானம் (ரூபா. மில்.)
24,028.0
21,450.0
20,245.0
மிகை விதிப்பு வருமானம் (ரூபா. மில்.)
235.0
233.0
248.0
சட்ட நடைமுறைப்படுத்தல் மற்றும் சட்ட ரீதியான அறவீடுகள் (ரூபா. மில்.)
876.0
912.2
869.6
நிதிக் கோரல்களை மீளளிக்கும் கொடுப்பனவு (ரூபா. மில்.)
13,478.0
11,492.5
13,858.9
நலன் கோரல்களின் கொடுப்பனவு (ரூபா. மில்.)
393.0
373.8
317.7
நிகர இலாபம் (ரூபா. மில்.)
20,410.0
18,004.0
17,132.3
அங்கத்தவர்களின் நிதியத்தின் தொகை (ரூபா. பில்.)
245.6
218.5
193.9
 
  முதலீடுகள்
அரசாங்க பிணைப் பொறுப்பில் வைக்கப்படுகின்ற ஊ.ந.பொ.நி. முதலீடுகளின் 91% இற்கும் அதிகமானவை தற்போதைய சந்தை நிலைமைகளில் உயர் வருவாய் உத்தரவாதத்தை வழங்குகின்றன. நியதிச்சட்டமுறையாக, சபை அதனது அனைத்து அங்கத்தவர்களுக்கும் வருடாந்த பங்கிலாபம் + வட்டி என்பவற்றை வெளிப்படுத்துதல் வேண்டும் . அது 2017 ஆம் ஆண்டு 9% ஆக காணப்பட்டது
 
  பிராந்திய அலுவலக வலைப்பின்னல்
சபை 19 பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கொழும்பு,கம்பஹா , கண்டி , இரத்தினபுரி,களுத்துறை,காலி,மாத்தறை,குருணாகல்,அனுராதபுரம்,பதுளை, கேகாலை, ஹம்பாந்தோட்டை , அம்பாறை,யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா மற்றும் திருகோணமலை  போன்ற பிரதான நகரங்களில் பிராந்திய அலுவலக வலைப்பின்னலைக் கொண்டுள்ளது. இது உரிய பிரதேசங்களில் சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளையும் வருமான அதிகரிப்பினையும் மேலும் பலப்படுத்தியுள்ளது.
 
 
  தகவல் தொழில்நுட்பம்
  தகவல் தொழில்நுட்ப துறையில் பிரதான புத்தாக்கங்கள் பின்வருமாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அங்கத்தவர்களின் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான போதிய ஆற்றலுடன் பிரதான கணனி முறைமை தரமுயர்த்தப்பட்டுள்ளது.
தலைமை அலுவலக கணனி முறைமையுடன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் நேரடியாக தொழிற்படுவதற்காக தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
கோரல்களுக்கான கொடுப்பனவு சிறந்த அங்கத்துவ நட்புரீதியான சேவையை வழங்குவதற்காக 06 பிராந்திய அலுவலகங்களுக்கு (கம்பஹா, கண்டி, குருணாகல்,மாத்தறை, பதுளை மற்றும் நுவரெலியா) பரவலாக்கப்பட்டுள்ளதுடன், இந்த வசதி எதிர்காலத்தில் ஏனைய பிராந்திய அலுவலகங்களுக்கும் விரிவிபடுத்தப்படவுள்ளது
தொழில்தருநர்கள் நேரடியாக  பங்களிப்புத் தொகைகளைச் செலுத்துவதற்கான வசதி 2008 செப்டம்பர் மாதத்திலிருந்து செயற்பாட்டிலிருப்பதுடன், இது, உதவுதொகையைப் பெறுவதில் பிரதானமான முன்னேற்றமாக விளங்குவதுடன் இச்செயல்முறை சிறந்த தொழில்வழங்குநர்களுக்கு வசதியாக அமையும்.
2010 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துக் கணக்குகளும் தொடரறா சேவையில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அங்கத்தவர்களின் கணக்குகள் நாளது வரைப்படுத்தப்படுகின்றன.
 
  சுயதொழில்
நிதியத்திற்கு அதிகமான சுயதொழில் அங்கத்தவர்களைச் சேர்ப்பதன் மூலம் சுவேலைவாய்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு சபை தீவிரமாக அவதானத்தைச் செலுத்துகின்றது. இது தொடர்பில், சுயவேலைவாய்ப்பை மேம்படுத்தும் அலுவலர்கள் பிரதான மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதான இலக்கு குழுமங்களாக சமுர்த்தி பெறுவோர், பாற்பண்ணையாளர், பத்திரிகை முகவர்கள், லொத்தர் முகவர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் போன்றோர் காணப்படுகின்றனர்.
 
   எதிர்காலத் திட்டங்கள்

ஊ.ந.பெ.நி. சபைக்கு தற்போதும் கொழும்பில் தனக்கென சொந்தமான கட்டடத்தொகுதி இல்லாதிருப்பதுடன் நாரஹென்பிட்டி, நாவல பிரதேசங்களில் 04 வாடகை அலுவலகங்களில் செயற்படுகின்றது. ஊ.ந.பொ.நி மற்றும் ஊ.சே.நி (தொழில்திணைக்களம்), ஊ.ந.நிதியத்தின் (மத்திய வங்கி) ஒரு பகுதி என்பவற்றை ‘’ ஒரேதடவையில் அனைத்து சேவைகளையும்” பெறக்கூடிய நவீன கட்டடத் தொகுதி அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குகியுள்ளது. இந்த கட்டடத்தின் நிருமாணம் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

ஊ.ந.பொ.நி. சொந்தமாகக் கொண்டிருக்கின்ற பெறுமதிவாய்ந்த ஆதனமான கொழும்பு 02, நவம் மாவத்தையிலுள்ள தற்போது வாகனத் தரிப்பிடமாகப் பயன்படுத்தப்படுகின்ற 2 1/4 ஏக்கர் மூலம் மாதாந்தம் 1.5 மில்லியன் ரூபா பெறப்படுகின்றது. இந்த ஆதனத்தை வர்த்தக இடமாகவிருத்தி செய்வதற்கான இணைந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான சாத்தியப்பாடு கவனத்தில் கொள்ளப்படுகின்றது.
 
 
 
   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.