“ ரஜரட்ட சிரமாபிமானி”  சுற்றுலா விடுதியை ஒதுக்கிக்கொள்ளல்
 
bungalow

01.

சபையின் ஊழியர்களுக்கும் வெளி பொது மக்களுக்கும் இச்சுற்றுலா விடுதியில் தங்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

02.

சுற்றுலா விடுதியின் அறைகள் ஒதுக்கும் பணி சபையினது தவிசாளரின் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும்.

03.

சுற்றுலா விடுதியின் அறைகளை ஒதுக்கிக்கொள்வதற்கு தேவையானவர்கள் அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன், அவ்வாறு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்படிவத்துடன் ஏற்புடைய கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு பணம் செலுத்திய பின்னர் மாத்திரமே அறைகள் ஒதுக்கப்படும்.

04.

அறைகள் ஒதுக்கும் விண்ணப்பப்படிவங்களை சபையின் பிரதான அலுவலகத்தில், தவிசாளரின் அலுவலகத்தில், பிரதேச அலுவலகங்களில் அல்லது சபையின் இணையத் தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். (www.etfb.lk)

05.

அறைகள் ஒதுக்கும் விண்ணப்பப்படிவங்கள் மூன்று வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
5.1   வெளி பொதுமக்களுக்கு அறைகள் ஒதுக்கும் விண்ணப்படிவம்.
5.2   சபை ஊழியர்களுக்கு அறைகள் ஒதுக்கும் விண்ணப்பப்படிவம்
5.3   சபையின் உத்தியோகபூர்வ கடமை நிமித்தம் தங்குமிட வசதியை கோருகின்ற ஊழியர்களுக்கான விண்ணப்பப்படிவம்

06.

அறைகள்  ஒதுக்குவதற்கான கட்டணங்கள் தவிசாளரின் அலுவலகத்திற்கு காசாக செலுத்த முடியும் அல்லது சபையின் பெயருக்கு கொமர்ஷல் வங்கியில் கொண்டுநடாத்தப்படும்  நடைமுறைக் கணக்கு இலக்கம் ' 02221143201'  க்கு வைப்பிலிட முடியும். ஏற்புடைய கட்டணத்தை வங்கியில் செலுத்துவதாயின் அவ்வாறு பணம் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டையும் விண்ணப்படிவத்தையும் தவிசாளரின் அலுவலகத்திற்கு சமர்ப்பித்து அறைகளை ஒதுக்கிக் கொள்ள முடியும்.

07.

பணம் செலுத்தி அறைகளை ஒதுக்கிய பின்னர் அவ்வாறு ஒதுக்கிய தினங்களில் ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தினால் தங்குமிட வசதி தேவைப்படாத பட்சத்தில் செலுத்தப்பட்ட பணம் மீளளிக்கப்படமாட்டாது. ஆயினும் தங்குமிட வசதி கோரப்பட்ட குறித்த தினத்திற்கு ஆகக் குறைந்தது 07 தினங்களுக்கு முன்னராவது தங்குமிட வசதி கோரிய தினத்திற்கு சமூகம் தரமுடியாது என்பதை தவிசாளரின் அலுவலகத்திற்கு எழுத்து மூலம் அல்லது தொலை நகல் மூலம் அறிவித்தால் அவ்வாறு ஒதுக்கப்பட்ட தினத்திற்கு பகரமாக சுற்றுலா விடுதியை ஏனையோர் ஒதுக்காத எதிர்வரும் தினமொன்றிற்கு ஒதுக்கித் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

08.

சுற்றுலா விடுதி ஒதுக்குவதை பதிவதற்காக தவிசாளரின் அலுவலகத்தில் மற்றும் அனுராதபுர பிரதேச அலுவலகத்தில் ஏடொன்று பேணப்படல் வேண்டும். சுற்றுலா விடுதிப் பொறுப்பாளரினால் அங்கு தங்குகின்றவர்களின் பெயர் பட்டியலொன்று முறையாகப் பேணப்படல் வேண்டும்.
அதற்கிணங்க விருந்தினர்களின் வரவையும் வெளிச்செல்லலையும் பதிவதற்காக சுற்றுலா விடுதிப் பொறுப்பாளரினால் பேணப்படும் பெயர் பதிவேட்டில் அங்கு தங்கும் நபரின் பெயர், தேசிய ஆள் அடையாள அட்டை இலக்கம், நிரந்தர முகவரி என்பன அங்கு பதியப்பட்டு அவர்களது கையொப்பங்கள் பெறப்பட்டு பேணிவரப்படல் வேண்டும். சுற்றுலா விடுதியை ஒதுக்கிக்கொள்ளும் நபரின் தேசிய ஆள் அடையாள அட்டை பரீட்சிக்கப்பட்ட பின்னர் அவருக்கு அங்கு தங்குவதற்கான அனுமதி வழங்கப்படும்.
விடுதியில் தங்கும் நபர் அறையிலிருந்து வெளியேறும் போது அவர், அவ்வாறு வெளியேறியதாக வரவு / வெளிச்செல்லல்  பெயர் பதிவேட்டில் திகதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு அவரிடமிருந்து கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

09.

சுற்றுலா விடுதி ஒதுக்கும் போது ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். ஆயினும் வெளி தரப்பினர் பணம் செலுத்தி சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

10.

ஒரு அறையில்  ஒரே தடவையில் தங்குவதற்கு முடியுமான நபர்களின் எண்ணிக்கை வயது வந்தோர் 02 இருவருக்கும் 12 வயதுக்குக் குறைந்த இரு பிள்ளைகளுக்கும் மாத்திரம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

11.

சுற்றுலா விடுதியை ஒதுக்குகின்ற போது அங்கு தங்கும் நபர்களின் எண்ணிக்கையை சரியாக குறிப்பிடுதல் வேண்டும். அவ்விருந்தினர்கள் மாத்திரம் அறைகளில் தங்குதல் வேண்டும். விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலதிகமான எண்ணிக்கையினர் சுற்றுலா விடுதியில் தங்குவதற்கான வசதியை வழங்காது மறுப்புத் தெரிவிப்பதற்கான அதிகாரம் சுற்றுலா விடுதிப் பொறுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

12.

சுற்றுலா விடுதியின் சமயலறையை பயன்படுத்துவதற்கு விருந்தினர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. தேவையான பொருட்களை சுற்றுலா விடுதிப் பொறுப்பாளருக்கு வழங்கி அவர் மூலம் உணவு சமைத்துக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு உணவு சமைப்பதெனின் எரி வாயுவுக்கென ஒரு தினத்திற்கு ரூபா 250 /- அறவிடப்படும். படுக்கை அறைக்குள் உணவு சமைப்பது அல்லது உணவு உட்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

13.

இச்சுற்றுலா விடுதியை மற்றும் அதன் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். அங்குள்ள தளபாடங்கள், பீங்கான் பொருட்கள் உள்ளிட்ட சகல உபகரணங்களையும் மிகவும் கவனமாக உபயோகித்தல் வேண்டும். அங்கு தங்குகின்ற காலப் பகுதியில் அங்குள்ள பொருட்களுக்கு ஏதேனும் சேதங்கள் அல்லது நட்டம் ஏற்படுமாயின் தங்கிய உறுப்பினர் அதற்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும். அதற்கான சந்தை விலைப் பெறுமதியை அறவிடும் அதிகாரம் சபைக்கு உண்டு.

14.

படுக்கை அறைக்குள் மின் அழுத்தி மூலம் உடை அழுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கென தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

15.

விருந்தினர்களின் உபயோகத்திற்காக வைக்கப்பட்டுள்ள கட்டில் விரிப்புகள் மற்றும் துவாய் என்பவற்றை அறையிலிருந்து வெளியேற முன்னர் பரீசோதித்து அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது தொடர்பாக விருந்தினருக்கு அறிவித்து அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அவற்றின் நட்டத்தை அறவீடு செய்வதற்கு சுற்றுலா விடுதிப் பொறுப்பாளர் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

16.

இது ஒரு பொதுச் சொத்து என்ற அடிப்படையில் மின்சாரம் மற்றும் நீர் என்பன சிக்கனமாக பாவிக்கப்படல் வேண்டும் என்பதை தங்கும் நபர்களுக்கு பொதுவாக அறிவூட்டும் வகையிலான அறிவித்தலொன்று சுற்றுலா விடுதியினுள் தொங்க விடப்படுதல் வேண்டும்.


 உத்தேசிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதிக் கட்டணங்கள் (குளிரூட்டப்பட்ட)

01.

சபையின் உத்தியோகத்தர் ஒருவர் உத்தியோகபூர்வ கடமைக்காக செல்லும் போது ஒரு அறைக்கு : ஒரு தினத்திற்கு ரூ. 300.00

02. ஊழியர் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தனிப்பட்ட ரீதியில் செல்லும் போது ஒரு அறைக்கு : ஒரு தினத்திற்கு ரூ. 1,000.00
முழு சுற்றுலா விடுதிக்கும் ( 4 அறைகள்) : ஒரு தினத்திற்கு ரூ. 3,500.00

03.

விருந்தினருக்கு ஒரு அறைக்கு : ஒரு தினத்திற்கு ரூ. 3,000.00
விருந்தினருக்கு முழு சுற்றுலா விடுதிக்கும் (4அறைகள்) : ஒரு தினத்திற்கு ரூ. 10,000.00

04. அதற்கு மேலதிகமாக எரி வாயுவுக்காக -ஒரு தினத்திற்கு ரூ.250.00 வீதம் அறவிடப்படும்

* மேலும் அதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் வரிகள் ஏற்புடையதாகும் ( வெட் வரி 11%)

சுற்றுலா விடுதியின் இருவர் தங்கும் 5 அறைகளில் ஒரு அறை சபையின் தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்காக ஒதுக்கி வைக்கப்படும்


'ரஜரட்ட சிரமாபிமானி சுற்றுலா விடுதி' அறைகளை ஒதுக்குவதற்கான விண்ணப்பப்படிவம்

 
   
© ETFB 2009. All Rights Reserved. Solution by SLT Web Services.